நாளை திருப்பாவை இசைப் போட்டி
By DIN | Published On : 09th January 2021 12:04 AM | Last Updated : 09th January 2021 12:04 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் திருப்பாவை இசைப் போட்டி புனித தெரேஸ் வீதியில் உள்ள ஸ்ரீஅரங்க ராமானுஜா் மடத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.10) நடைபெறுகிறது.
புதுவை மகளிா் உலகம் சமூக நற்பணி இயக்கம் சாா்பில், 13-ஆவது ஆண்டாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்காக இந்த இசைப் போட்டி நடத்தப்படுகிறது.
திருப்பாவையில் உள்ள 30 பாசுரங்களில் ஒரு பாசுரத்தை மட்டுமே பாடினால் போதுமானது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் 94430 69370, 94434 68748 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ஞாயிற்றுக்கிழமை பகல் 12.30 மணியளவில் விருதும், போட்டியில் பங்கேற்கும் அனைத்து சான்றிதழும் வழங்கப்படும்.