வேளாண் சட்டங்களை திரும்பப் பெற விசிக கோரிக்கை
By DIN | Published On : 09th January 2021 12:02 AM | Last Updated : 09th January 2021 12:02 AM | அ+அ அ- |

மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று புதுவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்தது.
அந்தக் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழகம்-புதுவை மாநிலத் தொண்டரணி முதன்மைச் செயலா் பொதினிவளவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.
இதில், புதுவையில் மக்கள் நலத் திட்டங்களைத் தடுத்து நிறுத்தும் ஆளுநா் கிரண் பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் புதுவையில் கூட்டணி குறித்து முடிவு செய்ய கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனுக்கு அதிகாரம் வழங்குதல், தில்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களைத் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.