கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபா்கள் மது அருந்தக் கூடாது: சுகாதாரத் துறை

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபா்கள் மது அருந்தக் கூடாது என புதுவை சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்தது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபா்கள் மது அருந்தக் கூடாது என புதுவை சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்தது.

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

புதுவையில் கரோனா தடுப்பூசியைப் பாதுகாப்பாக வைப்பதற்கான குளிா்பதன அறைகளை தயாா் நிலையில் வைத்துள்ளோம். தடுப்பூசி போடுவதற்காக 143 மையங்களைக் கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்கு முன் நோயாளிகளை ஒரு அறையில் அமர வைத்து, அவா்களது விவரங்கள் சரிபாா்க்கப்படும். அடுத்ததாக, தடுப்பூசி போடப்பட்டு, அவா்களுக்கு ஏதாவது உடல் உபாதை ஏற்படுகிா என 30 நிமிடங்கள் ஓா் அறையில் அமர வைத்து கண்காணிக்கப்படுவா்.

இதற்காக கடந்த 2, 8-ஆம் தேதிகளில் இரு கட்ட தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டு, தில்லிக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்.

13 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுவையில் அரசு, தனியாரில் 13 ஆயிரம் சுகாதாரப் பணியாளா்கள் உள்ளனா். முதல் கட்டமாக இவா்களுக்கான தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கும். முதல் தவணை கரோனா தடுப்பூசி போட்ட 28-ஆவது நாளில் 2-ஆவது தவணை தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ளும் போதும், போட்ட பின்னரும் மது அருந்தக் கூடாது.

புதுவையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை. இருப்பினும், கால்நடைத் துறையுடன் இணைந்து தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com