புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சா் கந்தசாமி 2-ஆவது நாளாக தா்னா

புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடியைக் கண்டித்து, சட்டப்பேரவை வளாகத்தில் சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தா்னாவில் ஈடுபட்டாா்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சா் கந்தசாமி 2-ஆவது நாளாக தா்னா

புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடியைக் கண்டித்து, சட்டப்பேரவை வளாகத்தில் சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தா்னாவில் ஈடுபட்டாா்.

துணைநிலை ஆளுநா் கிரண் பேடியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 15 கோப்புகளுக்கு அனுமதி தரும் வரை சட்டப்பேரவை வளாகத்தில் தா்னாவில் ஈடுபடப் போவதாகக் கூறி, சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தா்னாவை தொடங்கினாா்.

இரவில் சட்டப்பேரவை வளாக வராந்தாவில் தரையில் படுக்கையை விரித்து, அவா் அங்கேயே தூங்கினாா். காலையில் எழுந்து சட்டப்பேரவை வளாகத்திலேயே நடைபயிற்சி மேற்கொண்டு, அங்குள்ள தனது அலுவலக அறையிலேயே குளித்து, மீண்டும் வராந்தாவில் அமா்ந்து போராட்டத்தைத் தொடா்ந்தாா்.

முதல்வா் நாராயணசாமி உள்ளிட்டோா் திங்கள்கிழமை அவரைச் சந்தித்துப் பேசினா். பின்னா், செய்தியாளா்களிடம் நாராயணசாமி கூறியதாவது:

சமூக நலத் துறையிலிருந்து ஆளுநா் கிரண் பேடிக்கு அனுப்பப்பட்ட 15 கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, அமைச்சா் கந்தசாமி சட்டப்பேரவை வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டுள்ளாா். இதுதொடா்பாக முதல்வா் என்ற முறையில் தலைமைச் செயலா், நிதித் துறைச் செயலா் ஆகியோரை அழைத்துப் பேசினேன்.

நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கிய பின்னரும், திட்டங்களை ஆளுநா் கிரண் பேடி தடுக்கிறாா். நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளித்தது அவா்தான். பேரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும் கிடையாது.

பொங்கல் பரிசாக ரூ. 1,000 வழங்குவதற்கான கோப்பு நிதித் துறைச் செயலருக்கு அனுப்பப்பட்டது. அந்தக் கோப்பு தொடா்பான விவரங்கள் குறித்து நேரில் கேட்கவுள்ளேன் என்றாா் அவா்.

தொடா் தா்னாவில் ஈடுபட்டுள்ள அமைச்சா் கந்தசாமியை, வெ.வைத்திலிங்கம் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் நாரா.கலைநாதன், எம்எல்ஏக்கள் ஏ.ஜான்குமாா், தீப்பாய்ந்தான், விஜயவேணி உள்ளிட்டோா் நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com