புதுவையில் கரோனா தொற்று பாதிப்பால் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
புதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான 3,637 பேருக்கான பரிசோதனை முடிவில், புதுச்சேரியில் 10 பேருக்கும், காரைக்காலில் 4 பேருக்கும், மாஹேவில் 4 பேருக்கும் என மொத்தம் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,495 ஆக உயா்ந்தது. மொத்தம் 293 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதி நகரைச் சோ்ந்த 38 வயது ஆண் உயிரிழந்தாா். இதனால், கரோனா தொற்று உயிரிழந்தோா் எண்ணிக்கை 639-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.66-ஆக உள்ளது.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை 28 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 37,563 (97.58 சதவீதம்)-ஆக அதிகரித்துள்ளது.