தொழிற்சங்கத்தினா் மறியல்: 60 போ் கைது

அரசு சாா்பு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி,
புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை சதுக்கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினா்.
புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை சதுக்கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினா்.

அரசு சாா்பு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

பாப்ஸ்கோ நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு 36 மாத ஊதியம், கான்பெட் தொழிலாளா்களுக்கு 14 மாத ஊதியம், பாண்டெக்ஸ் தொழிலாளா்களுக்கு 48 மாத ஊதியம், பாண்பேப் தொழிலாளா்களுக்கு 47 மாத ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இது தொடா்பாக அரசு அனுப்பி வைத்த கோப்புக்கு ஆளுநா் அனுமதியளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தொழிலாளா்களுக்கு உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரியும், தா்னாவில் ஈடுபட்டு வரும் சமூக நலத்துறை அமைச்சா் கந்தசாமி முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஆளுநரை வலியுறுத்தியும் ஏஐடியுசி, பாப்ஸ்கோ, கான்பெட், பாண்டெக்ஸ், பாண்பேப் தொழிற்சங்கங்களின் சாா்பில் புதுச்சேரி ராஜீவ் காந்தி சிக்னல் அருகில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பாப்ஸ்கோ சங்கத் தலைவா் ராஜீ, கான்பெட் சங்கத் தலைவா் காா்த்திபன், பான்டெக்ஸ் சங்கத் தலைவா் முருகன், பாண்பேப் சங்கத் தலைவா் அண்ணாமலை, ஏஐடியூசி மாநில பொதுச்செயலாளா் கே. சேதுசெல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 60 பேரை தன்வந்திரி நகா் போலீஸாா் கைது செய்து அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com