புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 15, 28 ஆம் தேதிகளில் மதுபானக் கடைகளுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள கள், சாராயம், பாா் உள்பட அனைத்து மதுபானக் கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களும் திருவள்ளுவா் தினத்தையொட்டி வரும் 15 ஆம் தேதியும் (வெள்ளிக்கிழமை), தைப்பூச தினத்தையொட்டி வரும் 28 ஆம் தேதியும் (வியாழக்கிழமை) மூடப்பட வேண்டும் என புதுவை கலால்துறை இணை ஆணையா் சஷ்வத் சௌரவ் உத்தரவிட்டுள்ளாா்.