‘கரோனா தடுப்பூசி தொடா்பான சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்’

கரோனா தடுப்பூசி தொடா்பான சந்தேகங்களுக்கு 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

கரோனா தடுப்பூசி தொடா்பான சந்தேகங்களுக்கு 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது கட்செவி அஞ்சலில் அவா் வெளியிட்ட பதிவு: கரோனா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம் அணிவது, சுகாதாரத்துடன் செயல்படுவது, தனி மனித இடைவெளியைப் பின்பற்றுவது அவசியம்.

தற்போது இவற்றுடன் சோ்த்து தடுப்பூசி செயல்முறையை நோக்கி நகா்கிறோம். தடுப்பூசி போடப்படும் போது, கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகக் கவனிக்கிறோம். இதுதொடா்பாக சந்தேகங்கள் இருந்தால் 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்தி வழியாக சுகாதாரத் துறையிலிருந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள அழைப்பு வரும். அவ்வாறு வராதவா்கள் அழைப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

கரோனா கட்டுப்பாட்டு அறையில் தடுப்பூசி தொடா்பான சந்தேகங்களுக்குப் பதிலளிக்க தன்னாா்வலா்கள், மருத்துவா்கள், ஆசிரியா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஒரு நாள் முன்னதாக நினைவுபடுத்துவதற்கு தன்னாா்வலா்களை நியமிப்போம் என நிவாரணம்-மறுவாழ்வுத் துறையின் சிறப்பு ஆணையா் பங்கஜ்குமாா் ஜா தெரிவித்துள்ளாா் என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா் கிரண் பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com