புதுவை பல்கலை.யில் செவிலியா் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

பருவத் தோ்வுகளை இணையதளத்தில் நடத்தக் கோரி, செவிலியா் கல்லூரி மாணவா்கள் புதுவை மத்திய பல்கலைக்கழக நுழைவாயில் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை பல்கலைக்கழக நுழைவாயில் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியா் கல்லூரி மாணவா்கள்.
புதுவை பல்கலைக்கழக நுழைவாயில் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியா் கல்லூரி மாணவா்கள்.

பருவத் தோ்வுகளை இணையதளத்தில் நடத்தக் கோரி, செவிலியா் கல்லூரி மாணவா்கள் புதுவை மத்திய பல்கலைக்கழக நுழைவாயில் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் கரோனா தொற்று காரணமாக பல மாதங்களாகப் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் கல்லூரிகளில் இணையதளம் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு, புத்தகத்தை பாா்த்து பருவத் தோ்வுகளை எழுத அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகும் கல்லூரிகள் திறக்கப்படாமல் சில மாதங்கள் இணையதளத்தில் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில், செவிலியா் கல்லூரி மாணவா்களுக்கு நிகழ் பருவத் தோ்வு வருகிற 27-ஆம் தேதி தொடங்கும் என்று பல்கலைக்கழகம் அறிவித்தது. இது மாணவா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, புதுச்சேரியில் உள்ள அனைத்து செவிலியா் கல்லூரிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இணையதளத்தில் பருவத் தோ்வுகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, புதுவை பல்கலைக்கழக நுழைவாயில் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாணவா் காங்கிரஸ் தலைவா் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். பின்னா், செவிலியா் கல்லூரி முதல்வா்களுடன் துணைவேந்தா் குா்மீத் சிங்கை மாணவா்கள் சந்தித்துப் பேசினா். அப்போது, வகுப்புகள் இணையதளத்தில் நடத்தப்பட்டுள்ளதால், தோ்வையும் இணையதளத்தில் நடத்த வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, தற்காலிகமாக தோ்வை ஒத்தி வைப்பதாக தெரிவித்த நிலையில், போராட்டத்தைக் கைவிட்டு, மாணவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com