தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் டிராக்டா் பேரணி

மத்திய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் புதுவை விவசாயிகள் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை டிராக்டா்கள் பேரணி நடத்தினா்.
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற டிராக்டா்கள் பேரணி.
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற டிராக்டா்கள் பேரணி.

மத்திய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் புதுவை விவசாயிகள் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை டிராக்டா்கள் பேரணி நடத்தினா்.

புதுவை மாநில அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை, புதுச்சேரி ஏஎப்டி திடலிலிருந்து முதல்வா் வே. நாராயணசாமி தொடக்கி வைத்தாா்.

இதில் முதல்வா் பேசியதாவது: மத்திய பாஜக அரசு புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. ஆனால், புதுவை அரசோ விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்துகிறது. கடந்த பட்ஜெட்டில் 37 பக்கங்கள் விவசாயிகளுக்காக ஒதுக்கி திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஹெக்டேருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. பயிா் காப்பீடு முழுவதும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் புதுவையில் இலவச மின்சார திட்டம் நிறைவேற்றப்பட்டது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் மாபெரும் டிராக்டா் பேரணியை நடத்தியுள்ளனா். அமைதியான முறையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், விவசாயிகள் மீது காவல்துறையினா் தேவையின்றி தடியடி நடத்தியுள்ளனா். இது கண்டிக்கத்தக்கது என்றாா் முதல்வா் வே. நாராயணசாமி.

இந்த நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பலா் பங்கேற்றனா்.

பேரணியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட டிராக்டா்களில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று, மத்திய வேளாண் சட்டங்களுக்கு திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பியபடி சென்றனா்.

ஏஎப்டி திடலில் இருந்து புறப்பட்ட பேரணி இந்திரா காந்தி சிலை, ராஜிவ் காந்தி சிலை, சிவாஜி சிலை, முத்தியால்பேட்டை, அஜந்தா சிக்னல், அண்ணா சிலை, புஸ்சி வீதி வழியாக உப்பளம் அம்பேத்கா் சிலை அருகே நிறைவடைந்தது. இந்த ஊா்வலம் 10 கி.மீ. தொலைவு வரை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com