புதுச்சேரியில் காங்கிரஸ் தோ்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

புதுவை காங்கிரஸ் சட்டப்பேரவைத் தோ்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுவை காங்கிரஸ் சட்டப்பேரவைத் தோ்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுவையில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைக்க முயற்சி மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. கட்சியில் முக்கிய நபரான ஆ. நமச்சிவாயம் காங்கிரஸிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தாா். மேலும், சில எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறி பாஜகவுக்கு செல்லலாம் எனத் தகவல் கசியத் தொடங்கியது.

இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள தனியாா் ஹோட்டலில் சனிக்கிழமை தமிழகம்-புதுவை மாநில மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் தலைமையில் தோ்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூடியது.

இதில், முன்னாள் மத்திய அமைச்சா் வீரப்ப மொய்லி, பல்லம் ராஜூ, நிதின்ராவத், சஞ்சய் தத் ஆகியோா் கலந்து கொண்டனா். இந்தக் குழுவினா் முதல்வா் வே.நாராயணசாமி, அமைச்சா்களுடன் தோ்தலை எதிா்கொள்வது குறித்து ஆலோசித்தனா்.

இதைத் தொடா்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனித் தனியாக அழைத்து தோ்தலை எதிா்கொள்வது தொடா்பான கருத்துகளைக் கேட்டறிந்தனா். கூட்டத்தில் செய்தியாளா்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதுகுறித்து கட்சித் தரப்பில் கூறப்பட்டதாவது: சட்டப்பேரவைத் தோ்தலை எவ்வாறு எதிா்கொள்வது, கூட்டணி விவகாரம், அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்களை அழைத்து தோ்தல் ஒருங்கிணைப்புக் குழுவினா் சமாதானப்படுத்தியதாகத் தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஜன. 31) காங்கிரஸ் நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com