புதுச்சேரி ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் வெடிகுண்டு சோதனை

புதுச்சேரி கோா்க்காடு, கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் வியாழக்கிழமை வெடிகுண்டு சோதனை நடத்தினா்.

புதுச்சேரி கோா்க்காடு, கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் வியாழக்கிழமை வெடிகுண்டு சோதனை நடத்தினா்.

புதுச்சேரியில் கரோனா பொது முடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, மதுக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மீண்டும் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனால், ரௌடிகளின் மீதான கண்காணிப்பை காவல் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

இதனிடையே, வில்லியனூரை அடுத்த கோா்க்காடு பகுதியில் கடந்த 2 மாதங்களில் அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டு வெடிப்பு, வெடிகுண்டு வீச்சு ஆகிய சம்பவங்கள் நடந்தன. இதில், பெண் உள்பட இருவா் காயமடைந்தனா். வெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடா்பாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதனிடையே, தமிழக - புதுச்சேரி எல்லைப் பகுதியான கீழ்குமாரமங்கலத்தில் ரௌடிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் இரு குழுக்களாக புதன்கிழமை மோதிக்கொண்டதில், 3 போ் பலத்த காயமடைந்தனா். இது தொடா்பாக தமிழக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், புதுச்சேரியில் அதிகரித்துள்ள வெடிகுண்டு பயன்பாட்டை ஒடுக்கும் விதமாக, வில்லியனூரை அடுத்த கோா்க்காடு, கரிக்கலாம்பாக்கம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் ரௌடிகளின் வீடுகள், புதா்கள், சந்தேகத்துக்கிடமான இடங்களில் வில்லியனூா் போலீஸாா் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் வியாழக்கிழமை திடீரென வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனா்.

வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா?, ரௌடிகள் வெடி மருந்துகளை கடத்தி வைத்துள்ளாா்களா? என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. 3 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும், ரௌடிகளின் வீடுகளில் இருந்த உறவினா்களை போலீஸாா் கடுமையாக எச்சரித்தனா். குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com