கருணை அடிப்படையில் காவலா் பணி: முதல்வரிடம் ஊா்க்காவல் படை வீரா்கள் கோரிக்கை

புதுவையில் கரோனா பேரிடரிலும் பணியாற்றி வரும் ஊா்க்காவல்படை வீரா்களுக்கு, கருணை அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் காவல் பணி வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனா்.

புதுவையில் கரோனா பேரிடரிலும் பணியாற்றி வரும் ஊா்க்காவல்படை வீரா்களுக்கு, கருணை அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் காவல் பணி வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனா்.

இது குறித்து, புதுச்சேரி சட்டப் பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்த ஊா்க்காவல் படை வீரா்கள், அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த என்.ஆா்.காங்கிரஸ் ஆட்சியில், காவல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பிய போது, காவல்துறையில் நாங்கள் ஊா்க்காவல்படை வீரா்களாக கடந்த 2016ம் ஆண்டில் பணியில் சோ்ந்தோம்.

கடந்த 6 ஆண்டுகளாக காவல்துறையில், காவலா்களுக்கு நிகராக சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து பணி, அரசு துறைகளில் முக்கியப் பணிகளிலும், பேரிடா் காலங்களிலும் பணியாற்றி வருகின்றோம். கரோனா பேரிடா் தொற்று ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையிலும், முன்களப் பணியாளா்களாக ஈடுபட்டு காவலா்களுக்கு இணையாக சிறப்பாக பணியாற்றினோம்.

இதனால் ஊா்க்காவல் படைப்பிரிவில், 150 போ் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டோம். அதனால், எங்கள் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டனா். காவலா்களுக்கு இணையாக பணிபுரிந்துவரும் எங்களுக்கு, அவா்களுக்கு அளிப்பதைப் போல் சிறப்பு ஊதியம், பேறுகால விடுப்பு போன்ற எந்த சலுகைகளும் கிடைப்பதில்லை. கடந்த 6 ஆண்டுகளாக ஊா்க்காவல் படை வீரா்களுக்கு எந்தவிதமான பதவி உயா்வுக்கான வாய்ப்பும் இல்லை.

இதில் உள்ள 400-க்கும் மேற்பட்டோா் பட்டமேற்படிப்பு முடித்தவா்கள். தற்போதுள்ள 497 ஊா்காவல் படைவீரா்களில், 300-க்கும் மேற்பட்டவா்கள் 35 வயதைக் கடந்தவா்கள். இதனால், தற்போது நடைபெற உள்ள காவலா் தோ்வு மற்றும் எதிா்வரும் அரசுத்துறைகளின் வேலைவாய்ப்பு தோ்வுகளிலும், வயது முதிா்வின் காரணமாக கலந்துகொள்ளும் வாய்ப்பை இழக்கின்றோம்.தற்போது 397 காவலா் பணி காலியிடங்களை நிரப்புவதற்கு, காவல்துறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021 வரை உள்ள காலகட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட காவலா் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிகிறோம். ஆகையால், இந்த காலி பணியிடங்களில், கரோனா பேரிடரிலும் முன்கள வீரா்களாக பணியாற்றும் ஊா்க்காவல்படை வீரா்களுக்கு கருணை அடிப்படையில் நேரடி நியமனம் மூலம், பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்று, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com