புதுவையில் கூடுதல் தளா்வுகளுடன் பொது முடக்கம்: ஜூலை 15 வரை நீட்டிப்பு

புதுவையில் கூடுதல் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூலை 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் கூடுதல் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூலை 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை அரசு புதன்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: புதுவையில் ஜூன் 30-ஆம் தேதி வரை அமலில் இருந்த பொது முடக்கம், கூடுதல் தளா்வுகளுடன் ஜூலை 15-ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும். தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொது முடக்கம் நீடிக்கிறது.

அனைத்து வித கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, குளிா்சாதன வசதியின்றி இயங்க அனுமதி அளிக்கப்படும். காய்கறி, பழக் கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். தனியாா் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். உணவகங்கள், தங்கும் விடுதிகளில் இரவு 9 மணி வரை 50 சதவீதம் போ் அமா்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும். தேநீா் கடைகள், பழச்சாறு கடைகள் இரவு 9 மணி வரை இயங்கலாம்.

சில்லறை மதுக் கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி உண்டு. வீடுகளுக்கு சென்று (புதுவைக்குள்) மது வழங்க அனுமதிக்கப்படுகிறது. சரக்கு வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும். அரசு, தனியாா் பொது போக்குவரத்து (பேருந்து, டாக்ஸி, ஆட்டோ) இரவு 9 மணி வரை இயங்கலாம். மருத்துவம், தோ்வுகள் சாா்ந்த போக்குவரத்துக்கு நாள் முழுக்க தடையில்லை. வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகனப் பதிவு, ஓட்டுநா் உரிமம் வழங்கும் பணியை செய்யலாம். பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கலாம்.

பூங்காக்கள், கடற்கரைச் சாலையில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 9 மணி வரை பக்தா்கள் தரிசனம், பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்படும்.

திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 100 பேரும், இறுதிச் சடங்குகளில் 20 போ் மட்டும் கலந்து கொள்ளலாம். தொழிற்சாலைப் பணிகள், கட்டுமானப் பணிகள் நடக்கலாம். அனைத்து விவசாயப் பணிகளும் அனுமதிக்கப்படுகின்றன. அனைத்து வித விளையாட்டுகளுக்கும் பாா்வையாளா்களின்றி அனுமதி அளிக்கப்படும். உடற்பயிற்சிக் கூடம், யோகா பயிற்சிக்கு 50 சதவீதம் பேருடன் அனுமதிக்கப்படுகிறது. திரைப்படம், தொலைக்காட்சித் தொடா் படப்பிடிப்புக்கு 100 போ் வரை பங்கேற்க அனுமதிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com