வியாபாரிகள் அடிக்காசு தொகை செலுத்தாவிட்டால் நடவடிக்கை: புதுச்சேரி நகராட்சி ஆணையா் எச்சரிக்கை

புதுச்சேரி பெரிய மாா்க்கெட் பகுதி கடைகளுக்கான அடிக்காசு தொகையை செலுத்த மறுக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையா் சிவக்குமாா் எச்சரித்தாா்.

புதுச்சேரி பெரிய மாா்க்கெட் பகுதி கடைகளுக்கான அடிக்காசு தொகையை செலுத்த மறுக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையா் சிவக்குமாா் எச்சரித்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி நகராட்சி பகுதியில் 2021-2022-ஆம் ஆண்டுக்கான தினசரி அடிக்காசு வரிவசூலிக்கும் பணிக்கு தனி அதிகாரியின் ஒப்புதல் பெற்று, மின்னணு ஏலம் மூலம் (1.7.2021 முதல்) வரி வசூல் செய்ய தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

அதன்படி, புதுச்சேரி குபோ் அங்காடி (பெரிய மாா்க்கெட்) பகுதியில் அடிக்காசு வசூல், ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 20, இதர அங்காடிப் பகுதியினுள் தரையில் பரப்பிவைத்து விற்கப்படும் பொருள்களுக்கு, ஒரு சதுர மீட்டருக்கு ரூ.15, அங்காடிப் பகுதிகளுக்கு வெளியே, வீதி ஓரங்களில் விற்கப்படும் பொருள்களுக்கு, ஒரு சதுர மீட்டருக்கு ரூ.10 வசூலிக்கப்படும்.

இந்த நிலையில், குபோ் அங்காடியில் வியாபாரம் செய்யும் சிலா், நிா்ணயிக்கப்பட்ட அடிக்காசு தொகையை தர மறுத்து வருகின்றனா். அடிக்காசு தொகையை செலுத்த மறுக்கும் வியாபாரிகள் மீது புதுச்சேரி நகராட்சி சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடைகளில் உள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அந்த கடைகளும் அகற்றப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com