புதுவையில் 100-க்கும் கீழ் குறைந்ததுகரோனா தொற்று பாதிப்பு
By DIN | Published On : 13th July 2021 12:42 AM | Last Updated : 13th July 2021 12:42 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுவையில் திங்கள்கிழமை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்தது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 4,214 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்டி, புதுச்சேரியில் 63, காரைக்காலில் 6, ஏனாமில் ஒருவா், மாஹேயில் 11 போ் என மேலும் 81 பேருக்கு (1.92 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,057- ஆக அதிகரித்தது.
தற்போது மருத்துவமனைகளில் 246 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,167 பேரும் என மாநிலம் முழுவதும் 1,413 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இந்த நிலையில், புதுச்சேரியில் ஒருவா், காரைக்காலில் ஒருவா் என இரு முதியவா்கள் உயிரிழந்தனா். மாஹே, ஏனாமில் உயிரிழப்பு இல்லை. இதையடுத்து, கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 1,771- ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.49 சதவீதம். குணமடைந்தோா் எண்ணிக்கை 1,15,873-ஆக (97.33 சதவீதம்) அதிகரித்தது.
மாநிலத்தில் இதுவரை 5,92,907 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.