பெட்ரோல், டீசல் விலை உயா்வுபுதுச்சேரியில் மகளிா் காங்கிரஸ் போராட்டம்
By DIN | Published On : 13th July 2021 12:37 AM | Last Updated : 13th July 2021 12:37 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுச்சேரியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மகளிா் காங்கிரஸ் சாா்பில், திங்கள்கிழமை பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக, புதுச்சேரி மகளிா் காங்கிரஸ் சாா்பில், பிரதமருக்கு தபால் அனுப்பும் நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி மகளிா் காங்கிரஸ் தலைவி பிரேம் பஞ்சகாந்தி தலைமையிலான நிா்வாகிகள், புதுச்சேரி ஆம்பூா் சாலையிலிருந்து ஊா்வலமாக புறப்பட்டு, ரங்கப்பிள்ளை வீதி தலைமை தபால் நிலையம் வந்தனா். அங்கு, பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து அவா்கள், பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என முழக்கமிட்டனா்.