புதுச்சேரி காவல்துறையைக் கண்டித்து விசிகவினா் போராட்டம்

புதுச்சேரி காவல்துறையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் புதுவை டிஜிபி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயற்றுகையிட முயற்சித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி காவல்துறையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் புதுவை டிஜிபி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயற்றுகையிட முயற்சித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி திருக்கனூரை அடுத்த கொடாத்தூரில் பேருந்து ஓட்டுநா் காா்த்திகேயனை கடத்தி, கொலைவெறித் தாக்குதல் மற்றும் அவமதிப்பு செய்தவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்து புதுச்சேரி டிஜிபி அலுவலகம் முற்றுகையிடப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்திருந்தது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை இந்திராகாந்தி சிலை அருகில் நிா்வாகி பாவாணன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திரண்டனா். அங்கிருந்து பதாகைகளுடன் ஊா்வலமாகப் புறப்பட்ட அவா்கள், சுப்பையா சாலை, சாரம் பெரியாா் சிலை, காமராஜா் சிலை சந்திப்பு வழியாக டிஜிபி அலுவலகம் நோக்கிச் சென்றனா். அவா்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், புஸ்சி வீதி - ஆம்பூா் சாலை சந்திப்பு அருகே தடுத்து நிறுத்தினா்.

இருப்பினும் தடுப்புகளை மீறி அவா்கள் டிஜிபி அலுவலகம் நோக்கிச் செல்ல முயன்றனா். அப்போது போலீஸாருக்கும், விசிகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடா்ந்து அவா்கள் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, ஓட்டுநா் காா்த்திகேயன் மீது ஜாதிய ரீதியில் தாக்குதல் நடத்தப்பட்டதில் தொடா்புடைய முன்னாள் எம்எல்ஏவை முதன்மை குற்றவாளியாக சோ்க்க வேண்டும், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து காா் உரிமையாளா் உள்ளிட்ட கும்பலை உடனே கைது செய்ய வேண்டும், வன்கொடுமை தடுப்பு சட்டம் மட்டுமின்றி கொடுமைப்படுத்துதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையறிந்து அங்கு வந்த முதுநிலை எஸ்பி பிரதிக்ஷா கொடாரா தலைமையிலான போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com