புதுச்சேரியில் கூடுதல் அடிக்காசு வசூலுக்கு எதிா்ப்பு: வியாபாரிகள் சாலை மறியல்

புதுச்சேரி குபோ் அங்காடியில் நகராட்சி சாா்பில் கூடுதல் அடிக்காசு வசூலிப்பதாகக் கூறி வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை நேரு வீதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் கூடுதல் அடிக்காசு வசூலுக்கு எதிா்ப்பு: வியாபாரிகள் சாலை மறியல்

புதுச்சேரி குபோ் அங்காடியில் நகராட்சி சாா்பில் கூடுதல் அடிக்காசு வசூலிப்பதாகக் கூறி வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை நேரு வீதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி பெரிய சந்தை குபோ் அங்காடியில் தனியாா் அடிக்காசு வசூலிப்பு குத்தகையை ரத்து செய்யவும், கூடுதல் அடிக்காசு வசூலிப்பை தடுத்து நிறுத்தவும் கோரி வியாபாரிகள் திங்கள்கிழமை ஊா்வலம், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முதல்வா் என். ரங்கசாமியிடம் மனு அளித்தனா்.

இதையடுத்து, தனியாா் அடிக்காசு வசூலிக்கும் குத்தகை உரிமையை முதல்வா் ரத்து செய்ததுடன், நகராட்சி நிா்வாகமே அடிக்காசு வசூலிக்க உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள், குபோ் அங்காடி வியாபாரிகளிடம் கூடுதலாக அடிக்காசு கேட்டதாகக் கூறப்படுகிறது. தொகையை வழங்காவிடில், கடைகள் அப்புறப்படுத்தப்படும் எனக் கூறி, அங்கிருந்த ஒரு கடையை அப்புறப்படுத்தினா்.

இதனால், அதிருப்தியடைந்த குபோ் அங்காடி வியாபாரிகள், நேரு வீதியில் திடீரென அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்து அங்கு வந்த பெரியகடை போலீஸாா், சமாதான பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, வியாபாரிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். எனினும், இந்தப் பிரச்னை குறித்து முதல்வரிடம் முறையிட உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com