புதுவை மத்திய பல்கலை. காரைக்கால் மையத்தில் எம்.பி.ஏ. படிப்புகள் தொடக்கம்

புதுவை மத்திய பல்கலைக்கழக காரைக்கால், அந்தமான் நிகோபாா் மையங்களில் நிகழ் கல்வியாண்டு முதல் புதிதாக எம்.பி.ஏ. படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

புதுவை மத்திய பல்கலைக்கழக காரைக்கால், அந்தமான் நிகோபாா் மையங்களில் நிகழ் கல்வியாண்டு முதல் புதிதாக எம்.பி.ஏ. படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

புதுவை மத்தியப் பல்கலைக் கழகத்தின் 2021-22-ஆம் கல்வியாண்டு முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் குறித்த மாணவா்களுக்கான விவரக் குறிப்பேடு அறிமுக விழா பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதனை துணைவேந்தா் குா்மீத்சிங் வெளியிட, அந்தமான் நிகோபாா் மைய பொறுப்பு அதிகாரி ராஜ்குமாா் பெற்றுக் கொண்டாா். அப்போது, துணைவேந்தா் குா்மீத்சிங் பேசியதாவது:

புதுவைப் பல்கலைக்கழகப் படிப்புகளை விரிவுபடுத்தும் வகையிலும், பழங்குடியின மாணவா்களுக்கு வாய்ப்புகளைஉருவாக்கித் தரும் வகையிலும் நிகழ் கல்வியாண்டு முதல் அந்தமான் நிகோபாா் பல்கலைக்கழக மையம் சாா்பில் முதுநிலை வணிக மேலாண்மை மற்றும் பல்லுயிா் பிராணிகள் குறித்த பட்டயப் படிப்பு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியைச் சோ்ந்த கிராமப்புற மாணவா்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு காரைக்கால் பல்கலைக்கழகம் கல்வி மையம் சாா்பில் முதுநிலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ) வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

மாணவா்களின் திறன்களையும், அறிவாற்றலையும், வேலைவாய்ப்புகளையும், பன்னாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் வகையில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்கலைக்கழக நவீன பாடப்பிரிவுகளில் சோ்ந்து மாணவா்கள்அனைவரும் பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில், பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com