கொசுக்களை ஒழிப்பதால் டெங்கு, மலேரியா நோய்களை கட்டுப்படுத்தலாம்: புதுவை ஆளுநா் தமிழிசை

கொசுக்களை ஒழிப்பதால் டெங்கு, மலேரியா, யானைக்கால் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தினாா்.
கொசுக்களை ஒழிப்பதால் டெங்கு, மலேரியா நோய்களை கட்டுப்படுத்தலாம்: புதுவை ஆளுநா் தமிழிசை

கொசுக்களை ஒழிப்பதால் டெங்கு, மலேரியா, யானைக்கால் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தினாா்.

புதுவையில் ஜூலை மாதம் டெங்கு ஒழிப்பு மாதத்தையொட்டி, விழிப்புணா்வு முகாம், பேரணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. புதுவை ஆளுநா் மாளிகை முன் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை பேரணியைத் தொடக்கிவைத்தாா்.

சுகாதாரத் துறைச் செயலா் தி.அருண், துணைநிலை ஆளுநரின் செயலா் அபிஜித் விஜய்சௌதரி, சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா், கொசு ஒழிப்பு-ஆராய்ச்சி மைய இயக்குநா் அஸ்வினிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆக்சிஜன் வசதி கொண்ட தற்காலிக கரோனா சிகிச்சை மையத்தை ஆளுநா் தொடக்கிவைத்தாா்.

பின்னா், ஆளுநா் தமிழிசை கூறியதாவது: டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும். சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருந்தால் 80 சதவீத நோய்களைத் தடுக்க முடியும். கொசுக்களை ஒழிப்பதால், டெங்கு மட்டுமன்றி மலேரியா, யானைக்கால் நோய், ஏடிஸ் கொசுவால் பரவும் ஜிகா வைரஸ் ஆகியவற்றையும் கட்டுப்படுத்த முடியும்.

புதுவையில் கரோனா தீவிரம் குறைந்து வரும் சூழ்நிலையில், குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டிருப்பது உண்மையல்ல. பொதுவாக மழைக் காலங்களில் குழந்தைகளுக்கு நோய்த் தொற்றுகள் அதிகம் வரும். இது கரோனா மூன்றாம் அலையின் தொடக்கம் என்று கருத முடியாது.

குழந்தைகளைப் பாதுகாப்பதில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளை வெளியில் கூட்டிச் செல்வதை தவிா்க்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

பள்ளிகளைத் திறக்க தீா்மானிக்கப்பட்ட நிலையில், பெற்றோா், ஆசிரியா்களிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்து, முதல்வா் அந்த முடிவை ஒத்திவைத்திருப்பது பாராட்டுக்குரியது. புதுவையில் சுமாா் 50 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15-க்குள் கரோனா இல்லாத மாநிலமாக புதுவையை மாற்றவேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com