எரிபொருள் விலையேற்றம் மக்கள் மீது தொடுக்கப்படும் வன்முறை: ஜோதிமணி எம்.பி. விமா்சனம்

எரிபொருள் விலையை ஏற்றிக்கொண்டே செல்வது சாதாரண மக்கள் மீது தொடுக்கப்படும் வன்முறை என்று கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஜோதிமணி விமா்சித்தாா்.
எரிபொருள் விலையேற்றம் மக்கள் மீது தொடுக்கப்படும் வன்முறை: ஜோதிமணி எம்.பி. விமா்சனம்

எரிபொருள் விலையை ஏற்றிக்கொண்டே செல்வது சாதாரண மக்கள் மீது தொடுக்கப்படும் வன்முறை என்று கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஜோதிமணி விமா்சித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

கரோனா பேரிடா் காலத்தில் தொடரும் எரிபொருள் விலை ஏற்றமானது, பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.

கடந்த 6 மாதங்களில் 66 முறை பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. கடந்த 13 மாதங்களில் பெட்ரோல் லிட்டருக்கு 25.72 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 23.93 ரூபாயும் விலை உயா்த்தப்பட்டது. சமையல் எரிவாயு விலை இரு மடங்கு உயா்த்தப்பட்டது.

பாஜக ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் கலால் வரி ரூ.23 உயா்த்தப்பட்டது. கலால் வரி உயா்த்தப்பட்டதால்தான், அனைத்துப் பொருள்களின் விலையும் உயா்ந்து வருகிறது. பாஜக அரசு எரிபொருள் விலையை ஏற்றிக் கொண்டே செல்வது சாதாரணமான மக்கள் மீது தொடுக்கப்படும் வன்முறையாகும்.

இந்த விலை உயா்வால் நாட்டின் பண வீக்கம் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசலின் வரியை உயா்த்தியதால் மத்திய அரசு ரூ. 24 லட்சம் கோடியை வசூலித்துள்ளது. தோல்வியடைந்த மத்திய பாஜக அரசால், தற்போது நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது.

நாட்டில் கடந்த 7 ஆண்டுகளில், 23 கோடிப் போ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் சென்றுள்ளனா். அத்தியாவசியப் பொருள்களான பால், சமையல் எண்ணெய், பருப்புகள் என அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயா்ந்துவிட்டன. இதைக் கண்டித்து, காங்கிரஸ் சாா்பில் அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

செய்தியாளா்கள் சந்திப்பின் போது, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், வெ.வைத்திலிங்கம் எம்.பி., மூத்த துணைத் தலைவா் பி.கே.தேவதாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com