புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு
By DIN | Published On : 19th July 2021 11:07 AM | Last Updated : 19th July 2021 11:07 AM | அ+அ அ- |

கோப்புப்படம்.
புதுவை மாநில பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் விபரம், வெளியானது.
தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று காலை, 10:30 மணிக்கு வெளியானது. தமிழக தேர்வுத்துறை இயக்ககம் இதனை வெளியிட்டது.
அதன்பின், காலை, 11 மணி முதல், தேர்வுத் துறை இணைய தளத்தில், ஒவ்வொரு மாணவரும் தங்களின் மதிப்பெண் விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என, தேர்வுத்துறை மதிப்பெண் விவரங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி புதுவை மாநிலத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி மாணவர்களுக்கான பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் உள்ள 127 பள்ளிகளிலிருந்து 12,353 மாணவர்களுக்கும், காரைக்கால் மாவட்டத்தில் 23 பள்ளிகளிலிருந்து 2,321 மாணவர்களுக்கும் என மொத்தம் 14 ஆயிரத்து 674 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியாகி உள்ளன.
மதிப்பெண் பட்டியலை, கீழ்கண்ட இணைய தளங்கள் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம், மாணவர்களுக்கான செல்பேசியிலும் குறுந்தகவல் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா காரணமாக நிகழாண்டு பிளஸ் 2 தேர்வு நடக்காததால், கடந்த பத்தாம் வகுப்பில்(50%), பதினோராம் வகுப்பில்(20%), 12ஆம் வகுப்பில்(30%) எடுத்த சராசரி மதிப்பெண்கள் அடிப்படையில், கணக்கிடப்பட்டு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு.