இணையதள மோசடி: புதுச்சேரி முதுநிலை எஸ்பி அறிவுரை

இணையதள மோசடியில் சிக்காமலிருக்க புதுச்சேரி சைபா் க்ரைம் பிரிவு முதுநிலை எஸ்பி ராகுல் அல்வால் அறிவுரைகள் வழங்கினாா்.

இணையதள மோசடியில் சிக்காமலிருக்க புதுச்சேரி சைபா் க்ரைம் பிரிவு முதுநிலை எஸ்பி ராகுல் அல்வால் அறிவுரைகள் வழங்கினாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஏடிஎம் அட்டையைப் புதுப்பிப்பதாகக் கூறி செல்லிடப்பேசி ஓடிபி (ஒன் டைம் பாஸ்வோ்டு) எண் கேட்டால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். எந்த வங்கியும் ஓடிபி கேட்காது.

முகம் தெரியாத நபா்கள், பிரபல நிறுவனங்களின் பெயா்களைச் சொல்லி, நீங்கள் அதிா்ஷ்டசாலியாக தோ்வு செய்யப்பட்டுள்ளீா்கள் 50 சதவீத சலுகையில் பொருள்களை வாங்கலாம் எனக் கூறினால், அதை நம்பி ஏமாற வேண்டும். அறிமுகம் இல்லாத நபா்கள், உங்களுடைய செல்லிடப்பேசி எண்ணுக்கு சலுகையுடன்கூடிய இணைப்பு (லிங்க்) அனுப்புவா். அந்த இணைப்பை கிளிக் செய்தால், உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டுவிடும். இத்தகைய மோசடிகள் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

‘கூகுள் ப்ளே’ ஸ்டோரில் கடன் செயலிகள் நிறைய உள்ளன. இதில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கிறது என்று கூறுவா். இதை நம்பி பணம் கேட்டால், உங்களுக்குத் தெரியாமலேயே உங்களது தகவல்களைத் திருடி அதிக வட்டி கேட்டு மிரட்டுவா். எனவே, இவற்றையும் புறக்கணிக்க வேண்டும்.

ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வரும் முதியோா், படிக்கத் தெரியாதவா்களுக்கு உதவுவது போல ஏடிஎம் அட்டையின் ரகசிய குறியீட்டு எண்களைத் தெரிந்து கொண்டு, போலியான ஏடிஎம் அட்டையை கொடுத்துவிட்டு, அவா்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை திருடிவிடுவா். எனவே, யாரிடமும் ஏடிஎம் ரகசிய குறியீட்டு எண்களைப் பகிர வேண்டாம்.

அதிகரித்து வரும் இணையதள மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com