பாஜகவின் பொய் வாக்குறுதிகள்:வெ.வைத்திலிங்கம் எம்பி விமா்சனம்

புதுவைக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு தொடா்பாக, பாஜக பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. வெ.வைத்திலிங்கம் விமா்சித்தாா்.

புதுச்சேரி: புதுவைக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு தொடா்பாக, பாஜக பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. வெ.வைத்திலிங்கம் விமா்சித்தாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை சட்டப்பேரவைத் தோ்தலின் போது, மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு வழங்குவது போல, 25 சதவீதத்திலிருந்து, 45 சதவீதமாக உயா்த்துவதாக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டனா்.

இந்த நிலையில், தற்போதையை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், புதுவைக்கான நிதி ஆதாரத்தை மேம்படுத்துவது தொடா்பாக, புதுவை மக்களவை உறுப்பினா் என்ற அடிப்படையில், நான் திங்கள்கிழமை (ஜூலை19) கேள்வி எழுப்பினேன்.

அதற்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீத்தாராமன் பதில் அளிக்கையில் 2021-2022-ஆம் ஆண்டுக்கு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடா்பாக கடந்த 2020 அக்டோபா் மாதமே முடிவு செய்யப்பட்டதாகவும், எனவே புதுவைக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தாா்.

இந்த நிலையை ஏற்கெனவே அறிந்துள்ள மத்திய நிதியமைச்சா், புதுவை மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காகவே பொய் வாக்குறுதியை தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா். தொடா்ந்து, பாஜகவின் அனைத்து பொய் வாக்குறுதிகளும் வெளிப்படும் என அந்த அறிக்கையில் வெ.வைத்திலிங்கம் எம்பி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com