புதுச்சேரியில் கார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு

புதுச்சேரியில் கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவிடத்தில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

புதுச்சேரியில் கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவிடத்தில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய எல்லையில் கடந்த 1999 ஆம் ஆண்டு கார்கில் பகுதியில் நடைபெற்ற போரில், இந்திய ராணுவ வீரர்கள், எல்லை மீறி வந்த பாகிஸ்தான் வீரர்களை போரிட்டு விரட்டி அடித்தனர்.

இதில் 500க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன் நினைவாக 22ஆம் ஆண்டு கார்கில் போர் வெற்றி நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

புதுச்சேரி கடற்கரை சாலை போர் நினைவிடத்தில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com