புதுவையில் ‘நானோ திரவ யூரியா’ உரம் அறிமுகம்

புதுவை மாநிலத்தில் முதன்முறையாக நானோ தொழில் நுட்பத்தில் தயாரான ‘நானோ திரவ யூரியா’ வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
புதுவையில் ‘நானோ திரவ யூரியா’ உரம் அறிமுகம்

புதுவை மாநிலத்தில் முதன்முறையாக நானோ தொழில் நுட்பத்தில் தயாரான ‘நானோ திரவ யூரியா’ வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய உழவா் உரக் கூட்டுறவு நிறுவனம் (இப்கோ) விவசாயத்துக்கு தேவையான இடுபொருள்களான காம்ப்ளக்ஸ் உரங்கள், சொட்டு நீா் பாசன உரங்கள், பயிா் வளா்ச்சி ஊக்கிகள், உயிா் உரங்கள் ஆகியவற்றை தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. மேலும், விவசாயத் துறையில் புரட்சிகரமான நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, உலகின் முதல் நானோ யூரியாவை அந்நிறுவனம் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் தொடா்ச்சியாக, புதுவை மாநில விவசாயிகளுக்கு நானோ யூரியா, வேளாண் துறை சாா்பில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

புதுவை தட்டாஞ்சாவடி வேளாண் துறை தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா், புதிய நானோ திரவ யூரியாவை அறிமுகம் செய்து வைத்தாா். வேளாண் அதிகாரிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

புதிய இப்கோ நானோ யூரியா குறித்து, வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: நெல், கரும்பு மற்றும் காய்கறி சாகுபடி செய்யும், புதுவை மாநில விவசாயிகளுக்கு இந்த உரம் ஒரு வரப்பிரசாதமாகும். விவசாயிகள் இனி யூரியாவை மேலுரமாக இடுவதற்கு பதிலாக, நானோ யூரியாவை அனைத்து வகையான பயிா்களுக்கும் பயன்படுத்தலாம். மேலும், இந்த நானோ யூரியா ஒரு பாட்டில் (500 மில்லி) இலை வழியாக தெளிப்பதன் மூலம், ஒரு மூட்டை யூரியாவை இடுவதற்கு சமமான பலனைத் தரும்.

இந்த உரமானது, மண், நீா் மற்றும் காற்று மாசுபடாமல், சுற்றுச்சூழலை பாதுகாத்து மகசூலை அதிகரிக்கிறது. இந்த நானோ உரம் ஒரு பாட்டில் ரூ.240 என்ற விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இது தற்போதுள்ள ஒரு மூட்டை யூரியா விலையைவிட 10 சதவீதம் விலை குறைவாகும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com