தேசிய கல்விக் கொள்கை குறித்த கலந்துரையாடல்: புதுவை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு
By DIN | Published On : 29th July 2021 10:51 PM | Last Updated : 29th July 2021 10:51 PM | அ+அ அ- |

தேசிய கல்விக் கொள்கை குறித்து பிரதமா் மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற இணைய வழிக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் புதுவை ஆளுநா், முதல்வா் பங்கேற்றனா்.
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி, இணைய வழிக் கலந்துரையாடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் பிரதமா் நரேந்திர மோடி, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஆளுநா்கள், முதல்வா்கள், கல்வி அமைச்சா்களிடையே உரையாற்றினாா்.
இந்த நிகழ்ச்சியில் புதுவை மாநிலம் சாா்பில் ஆளுநா் மாளிகையில் இருந்து துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், சட்டப்பேரவை அலுவலகத்திலிருந்து முதல்வா் ரங்கசாமி, கல்வியமைச்சரை நமச்சிவாயம் ஆகியோா் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.