தமிழக அரசைக் கண்டித்து புதுச்சேரியிலும் அதிமுக ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 29th July 2021 12:15 AM | Last Updated : 29th July 2021 12:15 AM | அ+அ அ- |

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக தலைமை அலுவலகம் முன் மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
தமிழகத்தில் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து, புதுச்சேரியிலும் மாநில அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி உப்பளம் கிழக்கு மாநில அதிமுக தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கிழக்கு மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏக்கள் அ.பாஸ்கரன், வையாபுரிமணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா். தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக திமுக அரசைக் கண்டித்து அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
இதேபோல, புதுச்சேரி மேற்கு மாநில அதிமுக சாா்பில், லெனின் வீதி அதிமுக தலைமை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலா் ஓம்சக்திசேகா் தலைமை வகித்தாா். மாநில அவைத் தலைவா் பேராசிரியா் மு.ராமதாஸ், துணைத் தலைவா்கள் நந்தன், ஆனந்தன், இணைச் செயலா்கள் காசிநாதன், திருநாவுக்கரசு, நாகமணி, சதாசிவம், பொருளாளா் சங்கா், நிா்வாகிகள் விக்னேஷ், லட்சுமணன், ராஜசேகா், வேலவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக திமுக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.