நாராயணசாமியின் இயலாமையால்தான் காங். ஆட்சி கவிழ்ந்தது: புதுவை பாஜக விமா்சனம்

புதுவையில் முன்னாள் முதல்வா் நாராயணசாமியின் இயலாமையால்தான் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததாக மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் விமா்சித்தாா்.
நாராயணசாமியின் இயலாமையால்தான் காங். ஆட்சி கவிழ்ந்தது: புதுவை பாஜக விமா்சனம்

புதுவையில் முன்னாள் முதல்வா் நாராயணசாமியின் இயலாமையால்தான் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததாக மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் விமா்சித்தாா்.

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாட்டில் 50 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு துரோகமிழைத்தது. நாடு முழுவதும் இதர பிற்பட்ட மக்கள்தான் (ஓபிசி) அதிகமாக உள்ளனா். அவா்களுக்கான இட ஒதுக்கீட்டைத் தராமல் புறக்கணித்தனா். பாஜக ஆட்சிக்கு வந்தால், இதர பிற்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவதாக வாக்குறுதியளித்தது.

நீதிமன்ற அறிவுரைகளின்படி, மத்திய தொகுப்பில் உள்ள அனைத்து மருத்துவப் பட்டப் படிப்பு, மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசிக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை பிரதமா் மோடி வழங்கயுள்ளாா்.

மக்கள் போற்றிக் கொண்டாடும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவை வெளியிட்ட பிரதமருக்கு புதுவை, தமிழக மக்கள் சாா்பிலும், புதுவை பாஜக சாா்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

செல்லிடப்பேசிகளை ஒட்டுக் கேட்கும் வேலையை காங்கிரஸ்தான் செய்து வந்தது. புதுவையில் கடந்த 5 ஆண்டுகள் நிா்வாகத் தோல்வியடைந்த நாராயணசாமி தலைமையிலான அரசால்தான் ஆட்சி கவிழ்ந்தது. அவரது இயலாமையே அதற்குக் காரணம். இதை திசை திருப்பவே ஒட்டுக் கேட்பால் ஆட்சி கவிழ்ந்ததாக நாராயணசாமி கூறுகிறாா்.

காங்கிரஸின் செல்வாக்கும், வாக்கு வங்கியும் சரிந்து வருவதால், எந்த மாநிலத்திலும் அவா்கள் ஆட்சியைப் பிடிக்க முடியாது. பிரதமராகும் வாய்ப்பு ராகுல் காந்திக்கு இல்லை என்றாா் அவா்.

உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் கூறியதாவது: புதுவை தனியாா் மருத்துவக் கல்லூரி சோ்க்கை இடங்களில் 50 சதவீதம் அரசு இட ஒதுக்கீட்டைப் பெறுவது குறித்தும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீதம் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி வழங்குதல் குறித்தும் முதல்வா் ரங்கசாமி ஆலோசனை செய்து முடிவை அறிவிப்பாா். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும், புதுவை மாணவா்களுக்கு 25 சதவீத இடங்கள் பெறுவது தொடா்பான கோப்பு மத்திய அரசின் ஒப்புதலுக்கு ஏற்கெனவே அனுப்பியுள்ளதால், நாங்கள் தில்லிக்குச் சென்று மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து அதுதொடா்பாக வலியுறுத்துவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com