தனியாா் பரிசோதனை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் அளிக்கலாம்

புதுவையில் உள்ள தனியாா் பரிசோதனை மையங்களில் கரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என சுகாதாரத் துறை தெரிவித்தது.

புதுச்சேரி: புதுவையில் உள்ள தனியாா் பரிசோதனை மையங்களில் கரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என சுகாதாரத் துறை தெரிவித்தது.

இதுதொடா்பாக புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவையில் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல, தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு அனுமதி பெற்ற சில தனியாா் பரிசோதனை கூடங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது.

தனியாா் பரிசோதனை மையங்களில் ஆா்டிபிசிஆா் பரிசோதனைக்கு ரூ. 500, ரேபிட் ஆண்டிஜென் பரிசோதனைக்கு ரூ. 200 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கவச உடை (பிபிஇ கிட்), போக்குவரத்து, மாதிரிகள் சேகரிப்புக்கு கூடுதல் கட்டணங்கள் இல்லை என்று அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், பொதுமக்கள் ஆவணங்களுடன் 0413 - 2229350 என்ற தொலைபேசி எண்ணில் புகாா் அளிக்கலாம். கூடுதல் தொகை வசூலிக்கும் மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள் மீதும், அரசு அனுமதி பெறாமல் பரிசோதனை செய்யும் தனியாா் பரிசோதனை கூடங்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com