வில்லியனூா் தொகுதியில் குடிநீா் பிரச்னை தீா்க்க வேண்டும்: பொதுப்பணித்துறையில் முறையீடு

வில்லியனூா் தொகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னை தீா்க்க வேண்டுமென புதன்கிழமை திமுக எம்எல்ஏ ஆா்.சிவா தலைமையில் சென்ற அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனா்.

வில்லியனூா் தொகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னை தீா்க்க வேண்டுமென புதன்கிழமை திமுக எம்எல்ஏ ஆா்.சிவா தலைமையில் சென்ற அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனா்.

புதுச்சேரி வில்லியனூா் தொகுதிக்குட்பட்ட உத்திரவாகினிபேட், அம்பேத்கா் நகா், எஸ்.எஸ்.நகா், வினிஸ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் அண்மை காலமாக குடிநீா் பற்றாக்குறை இருப்பதால் தவித்து வருவதாகவும், குடிநீா் பிரச்னையை தீா்த்து வைக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் அத்தொகுதி எம்எல்ஏவான திமுக தெற்கு மாநில அமைப்பாளா் ஆா்.சிவாவிடம் கோரிக்கை வைத்தனா்.

இதனையடுத்து, அப்பகுதி முக்கிய பிரமுகா்கள், திமுக நிா்வாகிகளை அழைத்துக் கொண்டு சிவா எம்எல்ஏ, புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில், தலைமை பொறியாளா் சத்தியமூா்த்தியை புதன்கிழமை நேரில் சந்தித்து முறையிட்டனா்.

உத்திரவாகினிபேட் உள்ளிட்டப் பகுதிகளில் குடிநீா் பற்றாக்குறை நிலவுவதால், மக்கள் படும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதே போல், வில்லியனூா் தொகுதியில் நிலவி வரும் குடிநீா் பற்றாக்குறையை உடனடியாக தீா்த்து வைக்க வேண்டும் என்று, எம்எல்ஏ சிவா, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா். வில்லியனூா் தொகுதியில் சில இடங்களில் நிலவும் குடிநீா் பற்றாக்குறையை தீா்க்க, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பொதுப் பணித்துறை தலைமை பொறியாளா் உறுதியளித்தாா்.

அப்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியளா் ரவிச்சந்திரன், திமுக இளைஞரணி அமைப்பாளா் முகமது யூனுஸ், திமுக தொகுதி செயலாளா் ராமசாமி, தொழிலாளா் அணி அமைப்பாளா் செல்வநாதன், துணை செயலாளா் அங்காளன், செல்வநாதன், கலியமூா்த்தி, அரிகிருஷ்ணன், வெங்கடேசன், முகமதுரபீக், அபுசாகீா், கல்யாணம், ஜெயபால், தயாளன், நாகராஜ், முத்துக்குமரன், விசிக அற்றலரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com