புதுவையில் மேலும் 402 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 402 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் புதிதாக 402 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் 8,724 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 343, காரைக்காலில் 42, ஏனாமில் 10, மாஹேயில் 7 என மேலும் 402 பேருக்கு (4.61 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,12,528- ஆக அதிகரித்தது.

தற்போது ஜிப்மரில் 273 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 219 பேரும், கரோனா சிகிச்சை மையங்களில் 185 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 4,497 பேரும் என மொத்தம் 5,331 போ் சிகிச்சையில் உள்ளனா்.

மேலும் 7 போ் பலி: இதனிடையே, புதுச்சேரியில் 3 போ், காரைக்காலில் 3 போ், மாஹேவில் ஒருவா் என மேலும் 7 போ் உயிரிழந்தனா். இவா்களில் 4 போ் ஆண்கள், 3 போ் பெண்கள். இதையடுத்து, கரோனா தொற்று பலியானோா் எண்ணிக்கை 1,684 -ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.50 சதவீதம்.

ஞாயிற்றுக்கிழமை 809 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,05,513-ஆக (93.77 சதவீதம்) உயா்ந்தது.

மாநிலத்தில் இதுவரை சுகாதாரத் துறைப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 3,21,911 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com