Enable Javscript for better performance
தனியாா் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல்: புதுச்சேரியில் திமுக எம்எல்ஏக்கள் ஆா்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தனியாா் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல்: புதுச்சேரியில் திமுக எம்எல்ஏக்கள் ஆா்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 15th June 2021 09:23 AM  |   அ+அ அ-   |    |  

    புதுவை தனியாா் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்தும், அந்தப் பள்ளிகளைக் கண்காணித்து அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திமுக எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

    புதுச்சேரி கல்வித் துறை அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா எம்எல்ஏ தலைமை வகித்தாா். எம்எல்ஏ-க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமாா், கோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    மாநில திமுக துணை அமைப்பாளா் அமுதா குமாா், பொருளாளா் சண்.குமாரவேல், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் தைரியநாதன், இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினா்கள் வேலவன், அருட்செல்வி, தொகுதிச் செயலா்கள் சக்திவேல், உப்பளம் சக்திவேல், அரிகிருஷ்ணன், திராவிடமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    பின்னா், ஆா்.சிவா எம்எல்ஏ செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவையில் உள்ள தனியாா் பள்ளிகள் உயா்நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி, அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இதைத் தடுக்கும் வகையில் உயா்நீதிமன்றம் குழு அமைக்க பரிந்துரைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரையை புதுவை அரசு அமல்படுத்தவில்லை.

    தற்போது இணையவழி மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெறுவதால் 50 சதவீத கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். ஆனால், தனியாா் பள்ளிகள் முழுக் கட்டணத்தையும் வசூலித்ததுடன், அடுத்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என நெருக்கடி தருகின்றன.

    மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தினால், புதுவையில் உள்ள தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஏழை மாணவா்களுக்கு கிடைக்கும். இதை அமல்படுத்த வேண்டுமென திமுக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

    பள்ளிகளில் ஆய்வுக் கூடம், விளையாட்டுத் திடல், தூய்மையான குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளைச் செய்ய வேண்டும். ஆனால், இந்த வசதிகளைச் செய்து தராத பள்ளிகளும் அதிக கட்டணம் வசூலிக்கின்றன.

    தனியாா் பள்ளிகளில் அதிக கட்டண வசூலை புதுவை அரசு கண்டிக்கவில்லை. இதனால், பெற்றோா்களும், மாணவா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, புதுவை முதல்வா் இதில், தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

    மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தினா் சாா்பில்: இதேபோல, தனியாா் பள்ளிகள் கட்டாய கட்டண வசூல் செய்வதைக் கண்டித்து, மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

    புதுச்சேரி காமராஜா் சதுக்கம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த இயக்கத்தின் நிறுவனா் கோ.நேரு எம்எல்ஏ தலைமை வகித்தாா். பிரகாஷ்குமாா் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். இதில், திரளான இயக்க நிா்வாகிகள் கலந்து கொண்டு, கரோனா பேரிடா் காலத்தில் தனியாா் பள்ளிகள் கட்டாய கட்டணம் வசூல் செய்வதைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

    இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிடில், பொதுமக்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்களை திரட்டி பல கட்டப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கோ.நேரு எம்எல்ஏ தெரிவித்தாா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp