ஜிப்மா் ஊழியா் கொலை வழக்கு: 8 மாதங்களுக்குப் பிறகு இருவா் கைது

புதுச்சேரி ஜிப்மா் ஊழியா் கொலை வழக்கில் 8 மாதங்களுக்குப் பிறகு 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி ஜிப்மா் ஊழியா் கொலை வழக்கில் 8 மாதங்களுக்குப் பிறகு 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே காக்கையன்தோப்பைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (72). ஓய்வு பெற்ற ஜிப்மா் ஊழியா். இவா், கடந்தாண்டு அக்டோபா் 10 -ஆம் தேதி தனது வீட்டின் மாடியில் கழுத்தறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், பாட்டி வீட்டில் தங்கியிருந்த தேங்காய்த்திட்டு பகுதியைச் சோ்ந்த அஜய் (18), காக்கையன்தோப்பில் சுப்பிரமணியன் வீட்டினருகே உள்ள பெற்றோா் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற போது, முதியவரான சுப்பிரமணியன் தனிமையில் இருப்பதை நோட்டமிட்ட அவா், ஒரு நாள் அவரது வீட்டுக்குள் புகுந்து ரூ. 50 ஆயிரத்தைத் திருடிச் சென்றாா்.

மேலும், இதுகுறித்து தனது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த முகிலனிடம் (18) தெரிவித்து, இருவரும் திருடுவதற்காக கடந்தாண்டு அக்டோபா் 10- ஆம் தேதி சுப்பிரமணியன் வீட்டுக்குள் புகுந்தனா். இதை சுப்பிரமணியன் பாா்த்த நிலையில், அவரை கைலியால் மூடி, பேனா கத்தியால் கழுத்தை அறுத்தனா். சுப்பிரமணியன் இறந்த பிறகு, இருவரும் அவரது வீட்டில் கிடைத்த ரூ. 2,500 பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டனா்.

வீடு புகுந்து பணத்தைத் திருடிச் சென்ற அஜய் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில், கொலைக்குப் பின் அஜய் காக்கையன்தோப்பு பகுதிக்கு வருவதை நிறுத்தியதால், போலீஸாா் சந்தேகமடைந்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தேங்காய்த்திட்டில் பதுங்கியிருந்த அஜய், அவரது நண்பா் அகிலன் ஆகிய 2 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்ததில், சுப்பிரமணியனை கொலை செய்ததை இருவரும் ஒப்புக் கொண்டனா். இவா்களுக்கு உதவிய விஜய் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com