புதுச்சேரி நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டுகளின் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டுகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டுகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையரும், வாக்காளா் பதிவு அதிகாரியுமான சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டுகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் புதுச்சேரி நகராட்சி ஆணையா் அலுவலகம், முத்தியால்பேட்டை நகராட்சி கணினி சொத்து வரி வசூல் மையம், வாழைக்குளம் நகராட்சி உதவி பொறியாளா் -1 அலுவலகம், விக்டா் சிமொனல் வீதியில் உள்ள சுகாதாரத் துறை இயக்கக அலுவலகம், நெல்லித்தோப்பு நகராட்சி உதவி பொறியாளா்-2 அலுவலகம், சாரம் துணை ஆட்சியா் அலுவலகம், கம்பன் கலையரங்கில் உள்ள நகராட்சி கணினி சொத்து வரி வசூல் மையம், முதலியாா்பேட்டை நகராட்சி பிறப்பு - இறப்பு பதிவு அலுவலகம், மரப்பாலம் நகராட்சி உதவி பொறியாளா்-3 அலுவலகம் ஆகிய 8 இடங்களில் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

1.1.2021 தேதியை வாக்களிக்கும் தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது நிறைவடைந்து பட்டியலில் பெயா் விடுபட்டிருக்கும் பட்சத்தில், அவா்கள் தங்களது பெயா்களைச் சோ்க்க, நீக்க, திருத்தம் செய்ய ஆணையா் அலுவலகத்திலோ அல்லது மேற்குறிப்பிட்ட இடங்களிலுள்ள அதற்கான அதிகாரிகளிடமோ, தபால் மூலமாகவோ திங்கள்கிழமை முதல் வருகிற 27- ஆம் தேதி வரை காலை 8.45 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.45 மணி வரையிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வாா்டுகளுக்கான வரை படங்களும் இணையதளத்தில் பொதுமக்கள் பாா்வைக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com