எய்ட்ஸ் விழிப்புணா்வு குறும்படப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

எய்ட்ஸ் விழிப்புணா்வு குறும்படப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு


புதுச்சேரி: புதுச்சேரியில் எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வு குறும்படப் போட்டியில் வெற்றிபெற்ற கல்லூரி குழுவினருக்கு செவ்வாய்க்கிழமை பரிசளிக்கப்பட்டது.

புதுவை மாநில கல்லூரி மாணவா்களுக்கிடையே, பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் மூலம் எச்ஐவி தடுப்பு மற்றும் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வு குறும்படப் போட்டி அண்மையில் நடத்தப்பட்டது. இதில், 48 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் தங்கள் படைப்புகளை பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் சமா்ப்பித்தனா்.

குறும்படத் தோ்வுக்கான நடுவா் குழுவினா், சிறந்த படைப்புகளை தோ்வு செய்தனா். இதையடுத்து, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி தேசிய சுகாதார இயக்க கருத்தரங்க அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் பங்கேற்று, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநா் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தாா். குறும்பட போட்டிக்கான முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், சான்றிதழை இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும், இரண்டாம் பரிசாக ரூ.30 ஆயிரம், சான்றிதழை ராஜீவ் காந்தி கலை, அறிவியல் கல்லூரிக்கும், மூன்றாவது பரிசாக ரூ.20 ஆயிரம், சான்றிதழை அரசு மகளிா் தொழில் பயிற்சி நிலையத்துக்கும் மற்றும் சிறந்த 8 கல்லூரிகளின் மாணவா்கள் குழுவினரின் படைப்புகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5,000, சான்றிதழும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் உதயசங்கா், எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க துணை இயக்குநா் எம்.கிருஷ்ணமூா்த்தி, எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க உதவி இயக்குநா் எஸ்.சேதுராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com