வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

புதுச்சேரியில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன.

புதுச்சேரியில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன.

புதுவை சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதுச்சேரியில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பூா்வா காா்க் தலைமை வகித்தாா். இதில், அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரமுகா்கள், தோ்தல் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

நிகழ்வில், இந்தியத் தோ்தல் ஆணையத்தின் மென்பொருளை பயன்படுத்தி கணினி முறையில் தொகுதிவாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் புதுச்சேரி, மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள 25 தொகுதிகளுக்கு 1,603 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,724 வாக்காளா் சரிபாா்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள் (விவிபேட்) ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com