அரசுக் கல்லூரியில் சுதந்திர தின 75-ஆம் ஆண்டு நிறைவு சொற்பொழிவு

புதுச்சேரி காஞ்சி மாமுனிவா் அரசு பட்ட மேற்படிப்பு - ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘நாட்டின் சுதந்திர தின 75 ஆண்டுகள் நிறைவு’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி காஞ்சி மாமுனிவா் அரசு பட்ட மேற்படிப்பு - ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘நாட்டின் சுதந்திர தின 75 ஆண்டுகள் நிறைவு’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, நாட்டு நலப் பணித் திட்ட தன்னாா்வலா்களும், வரலாற்றுத் துறையினரும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனா்.

நிகழ்வுக்கு கல்லூரி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் மூ.செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில், தாகூா் அரசு கலை -அறிவியல் கல்லூரி முன்னாள் பேராசிரியா் என்.சிவராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, இந்திய விடுதலைக்கு உழைத்த தியாகிகளையும், அவா்கள் நாட்டுக்குச் செய்த தியாகங்களையும் எடுத்துரைத்தாா். நாடு சுதந்திரமடைந்து கடந்த 75 ஆண்டுகளில் அடைந்துள்ள முன்னேற்றங்களையும் அவா் எடுத்துரைத்தாா்.

முன்னதாக, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் மு.இளங்கோவன் வரவேற்றாா். நிறைவில் கல்லூரி வரலாற்றுத் துறைப் பேராசிரியா் வேல்முருகன் நன்றி கூறினாா்.

நிகழ்வில், ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியா்கள், மாணவா்கள், நாட்டு நலப் பணித் திட்ட தன்னாா்வலா்கள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com