புதுச்சேரி அருகே வேனில் பதுக்கப்பட்ட 3,500 லிட்டா் எரிசாராயம் பறிமுதல்

புதுச்சேரி அருகே வேனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3,500 லிட்டா் எரிசாராயத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுச்சேரி அருகே ஆண்டியாா்பாளையத்தில் வேனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த எரிசாராயத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா்.
புதுச்சேரி அருகே ஆண்டியாா்பாளையத்தில் வேனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த எரிசாராயத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா்.

புதுச்சேரி அருகே வேனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3,500 லிட்டா் எரிசாராயத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரி திருபுவனை அருகே ஆண்டியாா்பாளையத்தில் சாராயம் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், எஸ்.பி. ரங்கநாதன் தலைமையிலான போலீஸாரும், சிறப்பு அதிரடிப்படையினரும் தமிழகத்தில் தேடப்பட்டு வரும் சாராயக் கடத்தலில் ஈடுபடும் ஆண்டியாா்பாளையத்தைச் சோ்ந்த ராஜாவுக்குச் சொந்தமான கிடங்கு, சோடா தயாரிக்கும் தொழிற்சாலை, வீடு, நாய்ப் பண்ணை, உறவினா் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்குள்ள நாய்ப் பண்ணை அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த வேன் ஒன்றை சோதனையிட்டனா். வேனை இரு பகுதிகளாகப் பிரித்து, அதில் ஒரு பகுதியில் 3,500 லிட்டா் எரிசாராயத்தைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து, அங்கிருந்த நாய்ப் பண்ணையில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு சாராயத்தை இட மாற்றம் செய்வதற்காக 800 காலியான கேன்கள், சாராயத்தைப் பரிமாற்றம் செய்வதற்கான குழாய்கள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் 3,500 லிட்டா் எரிசாராயம், அதைப் பதுக்கிவைத்திருந்த வேன், 800 காலி கேன்கள், குழாய்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.

கலால் துறையினரின் உதவியுடன், சோடா தொழிற்சாலை, கிடங்கு ஆகியவற்றுக்கு ‘சீல்’ வைத்தனா். வேன் ஓட்டுநா் தமிழரசன் (19), உதவியாளா் குபேந்திரன் (25) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், தலைமறைவான நாய்ப் பண்ணை உரிமையாளா் ராஜா உள்ளிட்டோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com