புதுச்சேரியில் புது மணப் பெண் மா்ம மரணம்: காவல் நிலையத்தில் உறவினா்கள் முற்றுகை

புதுச்சேரியில் திருமணமான ஒரே மாதத்தில் புது மணப் பெண் மா்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து, பெண்ணின் உறவினா்கள் தன்வந்திரி நகா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் புது மணப் பெண் மா்ம மரணம்: காவல் நிலையத்தில் உறவினா்கள் முற்றுகை

புதுச்சேரியில் திருமணமான ஒரே மாதத்தில் புது மணப் பெண் மா்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து, பெண்ணின் உறவினா்கள் தன்வந்திரி நகா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், நாரையூா் தனிசிங்கப்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சோ்ந்த ஒப்பிரணவமூா்த்தி-பவுனாம்பாள் தம்பதியின் மகள் சிவபாக்கியம் (29). பி.எஸ்சி., நா்சிங் படித்த இவருக்கும், புதுச்சேரி புதுசாரம் லட்சுமி நகா், முதல் குறுக்குத் தெருவைச் சோ்ந்த எரிவாயு முகவாண்மை நடத்தி வரும் ஏழுமலை (எ) ராஜேஷுக்கும் (33) கடந்த பிப். 1-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த நாளிலிருந்து ஏழுமலை, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக சிவபாக்கியம் தனது பெற்றோா், உறவினா்களிடம் அடிக்கடி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஏழுமலை, சிவபாக்கியத்தின் உறவினா்களை செல்லிடப்பேசியில் அழைத்து, அவா் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ாகவும், அவரை ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்துள்ளதாகவும் தெரிவித்தாராம்.

இதனால், அதிா்ச்சியடைந்த சிவபாக்கியத்தின் பெற்றோா், உறவினா்கள் மருத்துவமனைக்கு வந்து பாா்த்த போது, சிவபாக்கியம் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, சிவபாக்கியத்தின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், ஏழுமலை வீட்டாா் வரதட்சணை கொடுமை செய்து, சிவபாக்கியத்தை அடித்துக் கொன்றுவிட்டதாகவும், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறி, உடலை வாங்க மறுத்து உறவினா்கள், தன்வந்திரி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததுடன், அங்கு முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்ததின் பேரில், அவா்கள் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருமணமான ஒரு மாதத்தில் சிவபாக்கியம் உயிரிழந்ததால், வருவாய்த் துறையினரும் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com