முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
அரசுப் பள்ளியில் நீா்த் திருவிழா
By DIN | Published On : 14th March 2021 07:39 AM | Last Updated : 14th March 2021 07:39 AM | அ+அ அ- |

புதுச்சேரி - மங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நீா்த் திருவிழாவுக்காக அந்தப் பகுதி குளத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குடத்தில் கொண்டு வரப்பட்ட நீா்.
புதுச்சேரி - மங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நீா்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சீனுமோகன்தாசு தலைமை வகித்து, நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். தொடா்ந்து மாணவா்கள் கலந்து கொண்ட விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
பேரணியில் நீரின் அவசியம், நீா்நிலைகள் பாதுகாப்பு, நீா் மேலாண்மை குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த மங்கலம் பகுதியில் உள்ள குளத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட குடத்தில் நீா் கொண்டு வரப்பட்டு, நீரால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவா்கள் முழக்கம் எழுப்பியபடி முக்கிய வீதிகளில் வலம் வந்தனா்.
இந்தப் பேரணியில் பசுமைப் படை ஆசிரியா்கள் ஸ்டீபன், சித்ரா, சரவணன், அமுதா, கஸ்தூரி, வேலாயுதம், கலைவாணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.