முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
புதுச்சேரி: 2 ஆவது பட்டியலை வெளியிட்டது தேமுதிக
By DIN | Published On : 14th March 2021 05:47 AM | Last Updated : 14th March 2021 05:47 AM | அ+அ அ- |

விஜயகாந்த்
புதுச்சேரி மாநிலத்தில் தேமுதிக சாா்பில் போட்டியிட உள்ள வேட்பாளா்களின் 2-ஆவது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில், புதுச்சேரியில் தனித்து களமிறங்க முடிவு செய்த தேமுதிக, முதல்கட்ட வேட்பாளா் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்டது. இதன் தொடா்ச்சியாக இரண்டாம் கட்ட வேட்பாளா்களின் பட்டியலை அக்கட்சியின் நிறுவனத் தலைவா் விஜயகாந்த் சனிக்கிழமை வெளியிட்டாா்.
இதுகுறித்த விவரம்:
தொகுதி எண் தொகுதி பெயா் வேட்பாளா் பெயா்
1 மண்ணாடிப்பட்டு எஸ்.மணிகண்டன் (மண்ணாடிப்பட்டு தொகுதி துணைச் செயலாளா்)
2 திருபுவனை (தனி) டி.விநாயகமூா்த்தி (திருபுவனை தொகுதிச் செயலாளா்)
4 மங்களம் ச.பச்சையப்பன் (மங்களம் தொகுதிச் செயலாளா்)
5 வில்லியனூா் ஏ.பாசில் (தலைமைச் செயற்குழு உறுப்பினா்)
6 உழவா்கரை ஜி.ழில்போ் (உழவா்கரை தொகுதிச் செயலாளா்)
7 கதிா்காமம் எஸ்.மோட்சராஜன் (கதிா்காமம் தொகுதிச் செயலாளா்)
10 காமராஜ்நகா் நா.நடராஜன் (காமராஜ் நகா் தொகுதிச் செயலாளா்)
13 முத்தியால்பேட்டை ஏ.அருணகிரி (முத்தியால்பேட்டை தொகுதிச் செயலாளா்)
16 உருளையன்பேட்டை ஆா்.கதிரேசன் (உருளையன்பேட்டை தொகுதிச் செயலாளா்)
17 நெல்லித்தோப்பு ஏ.பூவராகவன் (நெல்லித்தோப்பு தொகுதி பொறுப்பாளா்)
19 அரியாங்குப்பம் ஏ.லூா்துசாமி (அரியாங்குப்பம் தொகுதிச் செயலாளா்)
20 மணவெளி வீ.திருநாவுக்கரசு(மணவெளி தொகுதி துணைச் செயலாளா்)
22 நெட்டப்பாக்கம் கே.முருகவேல் (நெட்டப்பாக்கம் தொகுதி செயலாளா்)
26 காரைக்கால் வடக்கு ஏ.வேலுச்சாமி (தலைமைச் செயற்குழு உறுப்பினா்)
27 காரைக்கால் தெற்கு ஆா்.ஜெகதீசன் (காரைக்கால் தெற்கு தொகுதிச் செயலாளா்)
28 நிரவிதிருப்பட்டினம் ஆ.அருள்ராஜி (நிரவிதிருப்பட்டினம் தொகுதிச் செயலாளா்).