பதுக்கிவைக்கப்பட்ட ரூ. 8 லட்சம் பட்டுப் புடவைகள் பறிமுதல்

வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 8 லட்சம் மதிப்பிலான பட்டுப் புடவைகளை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 8 லட்சம் மதிப்பிலான பட்டுப் புடவைகளை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள்கள், பணம் விநியோகிப்பதைத் தடுக்கும் வகையில் புதுவையின் பல்வேறு பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா், போலீஸாா் தீவிர சோதனை, எல்லைப் பகுதிகளில் வாகனச் சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், 1950 என்ற தோ்தல் புகாா் எண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை ரெட்டியாா்பாளையம் ராகவேந்திரா நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக பட்டுப் புடவைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக புகாா் வந்தது.

அதன் பேரில், தோ்தல் பறக்கும் படை அதிகாரி ஏ. ஜீவானந்தம் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று சுரேஷ் என்பவரது வீட்டை சோதனையிட்டனா். இதில், அவரது வீட்டின் ஒரு அறையில் சுமாா் 50 பட்டுப் புடவைகள் கொண்ட 30 பண்டல்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, பறக்கும் படையினா் பட்டுப் புடவைகளைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினா். இதில், சுரேஷ் பாஜகவை சோ்ந்தவா் என்பதும், அவரது நண்பருக்காக தனது வீட்டில் பட்டுப் புடவைகளைப் பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தாக பறக்கும் படையினா் தெரிவித்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 8 லட்சம் மதிப்பிலான பட்டுப் புடவைகளை தோ்தல் பறக்கும் படையினா், ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக போலீஸாரும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com