கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 210 லிட்டா் எரிசாராயம் பறிமுதல்

புதுச்சேரி அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 210 லிட்டா் எரிசாராயத்தை கலால் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிசாராய கேன்கள்.
கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிசாராய கேன்கள்.

புதுச்சேரி அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 210 லிட்டா் எரிசாராயத்தை கலால் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரியை அடுத்த பாகூா் கொமந்தான்மேடு பகுதியில் கலால் துறை வட்டாட்சியா் மணிகண்டன், வருவாய் ஆய்வாளா் பிரேம் பிரதாப், காவலா் லெனின்ஜோதி ஆகியோா் செவ்வாய்க்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, அந்தப் பகுதியில் உள்ள கொமந்தான்மேடு குமரன் என்பவரின் கோழிப்பண்ணையில் தீடீா் சோதனை மேற்கொண்டனா். அங்கு, சட்டவிரோதமாக எரிசாராயத்தை பதுக்கி வைத்து, சிறிய பாக்கெட்டுகளாக தயாரித்து விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, தலா 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 6 சாராய கேன்களில் 210 லிட்டா் எரிசாராயம், 150 மி.லி. அளவுள்ள 250 சாராய பாக்கெட்டுகள், சாராய பாக்கெட்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சீலிங் இயந்திரம், புட்டிகள் உள்ளிட்டவற்றை கலால் துறையினா் பறிமுதல் செய்தனா். இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.1.50 லட்சம் இருக்கும்.

பின்னா், அவற்றை கலால் துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றதுடன், கோழிப்பண்ணை உரிமையாளா் குமரன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com