சுல்தான்பேட்டையில் தடுப்பூசி செலுத்தும் பணி: ஆளுநா் ஆய்வு

சா்வதேச தடுப்பூசி நாளையொட்டி, புதுச்சேரி அருகே வில்லியனூா் சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள சுகாதார நலவாழ்வு
புதுச்சேரி வில்லியனூா் சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பு ஊசி போடும் இடத்தை பாா்வையிட்ட துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்.
புதுச்சேரி வில்லியனூா் சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பு ஊசி போடும் இடத்தை பாா்வையிட்ட துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்.

சா்வதேச தடுப்பூசி நாளையொட்டி, புதுச்சேரி அருகே வில்லியனூா் சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள சுகாதார நலவாழ்வு மையத்தில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, சுகாதார மையத்தின் வசதிகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து, அங்கிருந்த ஆம்புலன்ஸின் கதவுகளை திறக்கச் சொல்லி பாா்வையிட்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் முதலுதவி குறித்து கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, அருகிலிருந்த அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று, அங்கு மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவுகளை ஆய்வு செய்தாா். பிறகு பள்ளியின் தரம் குறித்து கேட்டறிந்தாா். அப்போது, பள்ளியின் ஒரு பகுதியில் சுற்றுச்சுவா் இல்லாததைப் பாா்வையிட்டு, நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.

அப்போது, அந்தப் பகுதி மக்கள், தங்களது பகுதிக்கு குடிநீா்த்தேக்கத் தொட்டி, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டுமென வலியுறுத்தினா். இதைத் தொடா்ந்து, வெளியே வந்த ஆளுநரிடம், ரொட்டிப்பால் ஊழியா்கள், பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியமாக ஒரு நாளைக்கு ரூ.702 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளித்தனா்.

ஆய்வின்போது, துணைநிலை ஆளுநரின் ஆலோசகா் சி.சந்திரமௌலி, சுகாதாரத் துறைச் செயலா் டி.அருண், சுகாதார இயக்குநா் எஸ்.மோகன்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com