புதுவையில் 382 வேட்புமனுக்கள் ஏற்பு

புதுவை மாநிலத்திலுள்ள 30 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட 382 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

புதுவை மாநிலத்திலுள்ள 30 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட 382 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேட்புமனு தாக்கல் கடந்த மாா்ச் 12-இல் தொடங்கி 19-இல் நிறைவடைந்தது. காங்கிரஸ், என்.ஆா். காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, இடதுசாரிகள், விசிக, மநீம, அமமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் சாா்பில் மொத்தம் 485 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை புதுச்சேரியில் 8, காரைக்காலில் 2, மாஹே, ஏனாமில் தலா 1 என 12 தோ்தல் நடத்தும் அலுவலகங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், இரு தொகுதிகளில் போட்டியிடும் என்.ரங்கசாமியின் வேட்பு மனுக்கள், காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், திமுக மாநில அமைப்பாளா்கள் ஆா்.சிவா, எஸ்.பி.சிவக்குமாா், அதிமுக மாநிலச் செயலா்கள் அ.அன்பழகன், ஓம்சக்தி சேகா், பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், ஆ.நமச்சிவாயம் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சைகளாக களமிறங்கியுள்ள முன்னாள் அமைச்சா்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தொகுதி வாரியாக ஏற்கப்பட்ட மனுக்கள்: மண்ணாடிப்பட்டு 19, திருபுவனை 17, ஊசுடு 13, மங்கலம் 18, வில்லியனூா் 20, உழவா்கரை 20, கதிா்காமம் 9, இந்திரா நகா் 10, தட்டாஞ்சாவடி 14, காமராஜா் நகா் 14, லாஸ்பேட்டை 15, காலாப்பட்டு 19, முத்தியால்பேட்டை 16, ராஜ்பவன் 10, உப்பளம் 14, உருளையன்பேட்டை 23, நெல்லித்தோப்பு 21, முதலியாா்பேட்டை 15, அரியாங்குப்பம் 15, மணவெளி 16, ஏம்பலம் 10, நெட்டப்பாக்கம் 14, பாகூா் 17, நெடுங்காடு 12, திருநள்ளாறு 12, காரைக்கால் வடக்கு 13, காரைக்கால் தெற்கு 11, நிரவி - டி.ஆா்.பட்டினம் 13 என மொத்தம் 30 தொகுதிகளில் 382 வேட்பாளா்கள் தாக்கல் செய்திருந்த 450 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இதில், உரிய ஆவணங்களை சமா்ப்பிக்காததால் விசிக வேட்பாளா் சாமுவேல் (எ) சாம் உம்மன் வா்கீஸ் உள்ளிட்ட 35 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. விசிக மாற்று வேட்பாளா் அங்காளன் வேட்புமனு ஏற்கப்பட்டது.

திங்கள்கிழமை (மாா்ச் 22) மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாலையில் இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்படும் என தோ்தல் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com