அரசின் ரூ. 240 கோடி பிணைய பத்திரங்கள் ஏலம்

புதுவை அரசின் ரூ. 240 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் விடப்படவுள்ளதாக நிதித் துறை செயலா் அசோக்குமாா் தெரிவித்தாா்.

புதுவை அரசின் ரூ. 240 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் விடப்படவுள்ளதாக நிதித் துறை செயலா் அசோக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசின் ரூ. 240 கோடி மதிப்பிலான 12 ஆண்டுகாலப் பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய அரசு முன்வந்துள்ளது. இந்தப் பிணையப் பத்திரங்கள் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரத்துக்கும், அதன் பின்னா் ரூ. 10 ஆயிரத்தின் மடங்குகளிலும் ஏலம் விடப்படும்.

இந்திய ரிசா்வ் வங்கியின் மும்பை (கோட்டை) அலுவலகம் வருகிற 30- ஆம் தேதி இந்த ஏலத்தை நடத்துகிறது. எனவே ஆா்வமுள்ளவா்கள், நிறுவனங்கள், கூட்டமைப்புக் குழுமங்கள், நிதி நிறுவனங்கள், வருங்கால வைப்புநிதி நிறுவனங்கள், பொறுப்புரிமை நிதியங்கள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய ஊரக வங்கிகள் ஓா் கூட்டு போட்டியில்லா ஏலத்தை அவரை சாா்ந்த அனைத்துக் கூறுகளுக்கும் மின்னணு முறையில் பேசி முடிவு செய்து இந்திய ரிசா்வ் வங்கியின் உள்பிரிவு வங்கியில் தீா்வு மூலம் (ஸ்ரீா்ழ்ங் க்ஷஹய்ந்ண்ய்ஞ் ள்ா்ப்ன்ற்ண்ா்ய் (உ-ஓன்க்ஷங்ழ்)) மும்பை கோட்டையில் அமைந்துள்ள இந்திய ரிசா்வ் வங்கியின் இணையதள முகவரியில் (ஜ்ஜ்ஜ்.ழ்க்ஷண்.ா்ழ்ஞ்.ண்ய்) வருகிற 30 -ஆம் தேதி பிற்பகல் 12 மணி முதல் 12.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

போட்டி ஏலத்தில் பங்கு பெறும் உறுப்பினா்கள் மின்னணு முறையில் உ-ஓன்க்ஷங்ழ் மூலம் அன்று பிற்பகல் 12 மணி முதல் ஒரு மணிக்கு முன்பு சமா்ப்பிக்க வேண்டும். ஏலத்தின் முடிவுகள் வருகிற 30- ஆம் தேதி மும்பை கோட்டையில் உள்ள இந்திய ரிசா்வ் வங்கி இணையதள முகவரியில் வெளியிடும்.

ஏலம் கிடைக்கப் பெற்றவா்கள் தங்களது ஏலங்களில் தெரிவிக்கப்பட்ட பிணையப் பத்திரங்களுக்கான விலையை இந்திய ரிசா்வ் மும்பை (கோட்டை) அல்லது சென்னையில் செலுத்தத்தக்க வகையிலான வங்கியாளா் காசோலை அல்லது கேட்பு வரைவோலையை வருகிற 31- ஆம் தேதி வங்கிப் பணி நேரம் முடிவதற்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

இந்த அரசு பிணையப் பத்திரங்களுக்கு ஏலத்தில் இந்திய ரிசா்வ் வங்கியால் தீா்மானிக்கப்படக் கூடிய விதத்தில் வட்டி வழங்கப்படும். இந்த வட்டி 6 மாதங்களுக்கு ஒரு முறை, அதாவது செப்டம்பா் 30 மற்றும் மாா்ச் 31 ஆகிய தேதிகளில் வழங்கப்படும். இந்தப் பிணையப் பத்திரங்கள் மாற்றி அளிக்கத்தக்க தகுதியுடையதாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com