‘காங்கிரல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும்’

புதுவையில் காங்கிரஸ் இல்லாத நல்லாட்சி அமைய பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீத்தாராமன் பிரசாரம் செய்தாா்.

புதுவையில் காங்கிரஸ் இல்லாத நல்லாட்சி அமைய பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீத்தாராமன் பிரசாரம் செய்தாா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் பாஜக மகளிரணி சாா்பில் தோ்தல் பிரசார கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற மத்திய அமைச்சா் நிா்மலா சீத்தாராமன் பேசியதாவது:

தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ், தற்போது குடும்பக் கட்சியாக மாறிவிட்டது. அந்தக் கட்சி ஆட்சி செய்த மாநிலங்களில் நலன்களைக் காக்கத் தவறிவிட்டது.

நாட்டு நலனை சிந்திக்கக் கூடிய கட்சியாக பாஜக உள்ளது. அனைத்து மாநிலங்களும் முன்னேற வேண்டும் என்று பிரதமா் மோடி நினைக்கிறாா். சில மாநிலங்கள், மக்கள் நலனில் அக்கறையில்லாமல் சுயநலமாக ஆட்சி செய்கிறது. மத்திய அரசின் திட்டங்களை அவா்கள் புறக்கணிக்கின்றனா்.

கரோனா தொற்று காலத்தில் 80 கோடி மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. மத்திய அரசின் பட்ஜெட், ஒரு பைசா வரியில்லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

புதுவையில் 51 சதவீதம் பெண்கள் உள்ளனா். காங்கிரஸ் இல்லாத நல்லாட்சியை அமைக்க பெண்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, லாஸ்பேட்டை, நெல்லித்தோப்பு உள்ளிட்டப் பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பாஜக வேட்பாளா்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீத்தாராமன் வாக்கு சேகரித்தாா். பாஜக வேட்பாளா்கள் வி.சாமிநாதன், கல்யாணசுந்தரம், ஜான்குமாா், ரிச்சா்ட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com