மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்

புதுவையில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணிகளுடன் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

புதுவையில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணிகளுடன் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 6-ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் 324 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை தோ்தல் துறை தொடங்கியது.

புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளுக்கான 1,822 மின்னணு வாக்குப் பதிவு (பேலட் யூனிட்) இயந்திரங்கள், 1,724 விவிபாட் சாதனங்கள், 1,603 மின்னணு வாக்கு எண்ணிக்கை(கன்ட்ரோல் யூனிட்) இயந்திரங்கள் புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் தோ்தல் துறை அலுவலகத்திலிருந்து, புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூா் அரசு கலைக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரி, மகளிா் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு கடந்த இரு நாள்களாகக் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன.

இதையடுத்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தோ்தலுக்குத் தயாா்படுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 8 தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில், 23 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்கள் மற்றும் சின்னங்கள், அந்தந்த தொகுதி மின்னணு வாக்குப் இயந்திரங்களில் பொருத்தும் பணிகள் நடைபெற்றன. மாவட்டத் தோ்தல் நடத்தும் அதிகாரி பூா்வா காா்க், துணை மாவட்ட ஆட்சியா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மேற்பாா்வையில் வேட்பாளா்கள், முகவா்களின் முன்னிலையில் இந்தப் பணிகள் நடைபெற்றன.

இந்தப் பணிகளை காவல் துறை தோ்தல் பாா்வையாளா் நாத், வாக்கு எண்ணும் மையப் பொறுப்பாளா் சுதாகா் உள்ளிட்டோா் நேரில் ஆய்வு செய்தனா்.

இதேபோல, புதுவைக்குள்பட்ட மாஹே, ஏனாம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில், அந்தந்த தொகுதி வேட்பாளா்களின் பெயா்கள், சின்னங்களைப் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகளுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதுவை காவல் துறை தலைவா் ரன்வீா்சிங் கிருஷ்ணியா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். காவல் துணைத் தலைவா் மிலிந்த் மகாதேவ் தும்ப்ரே, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் பிரதிக்ஷா கோத்ரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com